NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** சீமான் மீது சமூக நீதி மாணவர் இயக்கம் புகார்

சீமான் மீது சமூக நீதி மாணவர் இயக்கம் புகார்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  அவர்களையும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியை தொண்டர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.


அதனை கண்டிக்கும் விதமாக சமூக நீதி மாணவர் இயக்கம்  திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களை மாணவர் அணி செயலாளர் ஜின்னா தலைமையில் மாவட்ட தலைவர் முகமது ராஜா,மாவட்ட செயலாளர்கள் அசரப் அலி, இலியாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், மாவட்டத் துணைத் தலைவர் மு .சையது முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் புகார் மனு  அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை அணை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments