// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி தேசிய கல்லூரியில் பொருளாதார பேரவை துவக்க விழா

திருச்சி தேசிய கல்லூரியில் பொருளாதார பேரவை துவக்க விழா

திருச்சி  தேசிய கல்லூரியில் பொருளாதார பேரவை  துவக்க விழா இன்று  நடைபெற்றது.  முனைவர் எஸ். திருமாறன், வரவேற்புரையாற்றினார் தேசிய கல்லூரி முதல்வர் கே. குமார் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் மற்றும்  தேர்வு நெறியாளர் முனைவர் து. ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். 




துணை முதல்வர் R.இளவரசு சிறப்பு விருந்தினரை கௌரவித்து‌ வாழ்த்துரை வழங்கினார்.  இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி இலக்கியா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார், பொருளாதார பேரவையை பிம் மேலாண்மை பொருளாதார பேராசிரியர் முனைவர் எஸ். எம். சூரியகுமார், துவக்கிவைத்து  "உலக பொருளாதாரத்தில் இந்தியா: G20-யில் தலைமை வழிகாட்டுதல்" என்ற தலைப்பில் பேசினார். 

                             



பொருளாதார துறையில் நூற்றிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்   கலந்து கொண்டனர். பொருளாதார துறை மாணவிகள் எஸ். அபிராமி & எஸ். மீனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.  பொருளாதாரப் பேரவையின் துணைத் தலைவர் முனைவர் ஞா. ரகுநாத் நன்றி கூறினார்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments