// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக திருச்சி மாவட்டச் சார்ந்த VM.பாரூக், KMK.ஹபீபுர் ரஹ்மான் மற்றும் AMH.அன்சர் அலி ஆகியோர் நியமனம் கோவையில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் அறிவிப்பு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் தேசிய தலைவர் பேராசிரியர் KM.காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த மாநில துணைச் செயலாளர் VM.பாரூக்,தெற்கு மாவட்ட தலைவர் KMK.ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாணவர் அணி மாநில அமைப்பாளர் AMH.அன்சர் அலி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.



தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகிகள், துணை நிர்வாகிகள், மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments