NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தேசியக்கல்லூரி நூலகத்துறை பயிற்சி பட்டறை நிறைவு விழா

தேசியக்கல்லூரி நூலகத்துறை பயிற்சி பட்டறை நிறைவு விழா

 திருச்சி தேசியக்கல்லூரியின் நூலகவியல் துறையில் நூலக வேலைவாய்ப்புப் பயிற்சிப்பட்டறை நிறைவு விழா தொடங்கியது. 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணாக்கர்கள் 8 பேர் இப்பயிற்சிப் பட்டறையில் (14.11.2023) முதல் (18.11.2023) வரை ஏழு நாட்கள் பயிற்சி பெற்றனர். நூலக மேலாண்மைஇ நூலகப் பகுப்பாய்வு, நூலகசெயல்பாடு, புதியஉத்திகள் மற்றும் நூலக மென்பொருள் மேலாண்மை, மின் நூலகபயன்பாடு, மின்இதழ் பற்றிய பயன்பாடு குறித்து இப்பயிற்சியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இப்பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா நடைபெற்றது.


பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நூலகவியல் துறைத்தலைவர் முனைவா த. சுரேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் க.ரகுநாதன் பயிற்சிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் வளர்ந்து வரும் நூலகர்களாகிய நீங்கள் தற்பபாழுது வளர்ந்து வரும் பதாழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல் தங்களின் திறமமகமள வளர்த்துக் பகாள்ள வேண்டும்.தேசிய கல்லூரி நூலகத்தின் உள்ள நூல்கள், மின்-இதழ்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் போன்ற அனைத்து விதமான ஆவணங்களையும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் அலைபேசியின் வாயிலாக எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இதே போன்று வருங்கால நூலகர்களாகிய நீங்கள் இக்காலத்திற்கு ஏற்றார் போல் தங்கள் தொழில்நுட்ப திறமையை வளர்த்துக் கொள்ள வேண் டும் என்று பொருள்பட சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.குமரர் விழாவிற்குத் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். தட்டச்சு பயிற்சியாளர் அன்புமணி நன்றியுரை நல்கினார். பேராசிரியர்களும் நூலக உதவிநூலகர் ராதாஜெயலெட்சுமி, நூலக உதவியாளர்கள் லெட்சுமணன், கலியமூர்த்தி, உமா மகேஸ்வரி, ஹரிஹரன் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments