// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** பழனி பாபா நினைவு நாளையொட்டி பார்வை திறன் குறைபாடு மாணவிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

பழனி பாபா நினைவு நாளையொட்டி பார்வை திறன் குறைபாடு மாணவிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

 பழனி பாபாவின் நினைவு நாளான இன்று பார்வைத் திறன் குறைபாடு உள்ள திருச்சி புத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது...


பழனிபாபா அவர்களின் நினைவு நாளான இன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பாக பார்வைத் திறன் குறைபாடு உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இன்றைய தினம் காலை உணவு வழங்கப்பட்டது..


தொழிற்சங்க மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையிலும் ஆட்டோ தொழில் சங்க மாவட்ட செயலாளர் பாலக்கரை ஜாகீர் ஷெரீப் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோரது முன்னிலையிலும் இன்று மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது



தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் உணவு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்..



உடன் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாஹா ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் ராம்குமார் ஆட்டோ தொழிற்சங்க பாலக்கரை பகுதி செயலாளர் சேட்டு ஜங்ஷன் பகுதி செயலாளர் ஷாஜகான் உள்ளிட்ட தோழர்களுடன் இருந்தனர்.


மாணவிகளின் பசியாற்றும் உன்னதமான நிகழ்வினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

Post a Comment

0 Comments