NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** பொது மக்கள் மற்றும் கால் நடைகளுக்கு சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் கோழிப்பண்னையின் மீது நடவடிக்கை கோரி கண்டன ஆர்ப்பார்ட்டம்

பொது மக்கள் மற்றும் கால் நடைகளுக்கு சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் கோழிப்பண்னையின் மீது நடவடிக்கை கோரி கண்டன ஆர்ப்பார்ட்டம்

 திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் சமூகநீதி  பேரவைதிருச்சி மாவட்டம் அமைப்பாளர் சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கிராம முக்கிஸ்தார் தீனதயாளன் , சமூக ஆர்வலர்  ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். கண்டன ஆர்பாட்டத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆள்வரைக்குட்பட்ட சேர்குடி, சூரம்பட்டி, சிட்டிலரை கிராமங்களில் சுமார் 5,000க்கு மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 


எங்கள் கிராமத்தை சுற்றி சுமார் 2கிலோ மீட்டர் பரப்பளவுக்குள்ளேயே 50க்கு மேற்ப்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளனர். இக்கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் செயற்கையாக கூண்டில் அடைத்து வளர்க்கப்படுகின்ற பிராய்லர் கோழிகளாகும். அக்கோழிகளினுடைய கழிவுகள், அக்கோழிகளால் உருவாகின்ற கிருமிகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற மருந்து, செயற்கைஉணவுக்கழிவுகள் அளவுக்கதிகமான கழிவுகள் வெளியில் கொட்டப்படுவதாலும் அதன் மூலம் உருவாகின்ற ஈக்கள், கொசுக்கள், கிருமிகள் எங்கள் கிராம மக்களையும் நாங்கள் வளர்த்து வருகின்ற ஆடு, மாடுகளையும் கடுமையான நோய் தொற்றுக்கு உள்ளாக்குகின்றன. 


குழந்தைகளுக்கு விஷக்காய்ச்சல், வாந்தி, பேதி உருவாகின்றன,துர்நாற்றம் வாழமுடியாத சூழலுக்கு உள்ளாக்குகின்றன. கிராமம் முழுக்க ஈக்கள் பரவிகிடைக்கின்றன பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் என அனைவரும் கடுமையான நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் கிராம மக்களின் ஆரோக்கியமும், சுற்றுசசூழலும், மேற்படி கோழப்பண்ணைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை கிராம பொதுமக்கள் சார்பாக மனுக்கள் கொடுத்தும் முறையீடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


எங்கள் கிராம மக்களினுடைய உணர்வுகளையும், பாதிப்பினையும் வெளிப்படுத்தும் வகையில் மக்கள் சமூகநீதிப்பேரவை மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம்.எனவே மதிப்பிற்குரிய வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சேர்குடி, சூரம்பட்டி, சிட்டிலரை மூன்று கிராமப்பகுதிகளில் நோய்தொற்றினை ஏற்படுத்துகின்ற ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கின்ற கோழிப்பண்ணைகளை உடனடியாக அப்புறப்படுத்தி மக்களின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் காப்பாற்றுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம் என்றுமக்கள் சமூகநீதி  பேரவைதிருச்சி மாவட்டம் அமைப்பாளர் சிவசங்கர் கூறினார்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்


கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments