NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி செங்குளம் காலனி அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா

திருச்சி செங்குளம் காலனி அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலய ஜீர்ணோதாரன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 


முன்னதாக திருச்சி காவேரி ஆறு அம்மா மண்டப படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் மகா கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து மாலை விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், பிரதான மூர்த்தி கலாகரஷனத்துடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது.


வரைத் தொடர்ந்து இன்று காலை மகா கணபதி பூஜை உடன் இரண்டாம் கால யாக பூஜை, மண்டப பூஜை, யாத்ரா தானத்துடன் ஆலய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலய கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரின் அருள் ஆசி பெற்று சென்றனர்.





மேலும் அருள்மிகு செல்வ முத்து விநாயகர் ஆலய ஜீரீணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments