NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அரசு வன விரிவாக்க மையத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் திருச்சி மாவட்ட வன விரிவாக்க மைய அலுவலர்

அரசு வன விரிவாக்க மையத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் திருச்சி மாவட்ட வன விரிவாக்க மைய அலுவலர்

 திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 5 ம் தேதி வரை தலைமை வனப் பாதுகாவலர் சதிஷ் அறிவுரையின்படியும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ஆலோசனைபடியும்,வனவியல் விரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையில் நடைப்பெற்றது..


வனச்சரக அலுவலர், கிருஷ்ணன் ரவி, மற்றும் வனவர் விக்னேஷ் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு நாற்றங்கால் செயல்முறைகளான தாய்ப்பாத்தி அமைத்தல், மண்கலவை தயார் செய்தல், மண் கலவையை பைகளில் நிரப்புதல், தாய்ப்பாத்தியில் முளைத்த விதை நாற்றுகளை பைகளுக்கு மாற்றுதல், நீர்பாய்ச்சுதல், களை எடுத்தல், தரம்பிரித்தல், பைகளை இடம்மாற்றுதல் தொடர்பான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் விதைமரம் தேர்வு செய்தல் (Plus Tree), விதைகளை சேரகம் செய்தல், விதை முளைப்பு திறன், விதை நேர்த்தி முறை, பல்வேறு வகையான மர விதைகளை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


பள்ளி மாணவர்கள் சுயமாக நாற்றங்கால் உற்பத்தி செய்து மேம்படும் வகையில் நாற்றங்கால் தொழில்நுட்பம் குறித்து சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தொழிற்கல்வி ஆசிரியை (விவசாயம்) கல்பனா ,முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்)  ரமீலா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஒருங்கினைத்து வழிநடத்தினர் இப்பயிற்சியின் இறுதி நாளான இன்று பங்கு பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வன விரிவாக்க அலுவலர் சரவணகுமார் வழங்கினார். 



இந்த பயிற்சி குறித்து வன விரிவாக்க அலுவலர் சரவணக்குமார் தெரிவித்ததாவது :- தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் ,விவசாயம் சார்ந்த படிக்கும் மாணவர்களுக்கும் வன விரிவாக்க மையத்திற்கு நேரடியாக அழைத்து வந்து விதைகள் மற்றும் அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும் எனவும் கற்றுக் கொடுக்கப்படும்


மேலும் மண் கலவைகள் ,பாத்தி அமைத்து நடவு முறை மற்றும் செடிகளுக்கு எவ்வாறு அடிஉரம் அளிப்பது என மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .

தமிழக அரசின் இந்த முயற்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வன விரிவாக்க மையத்தில் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



வன விரிவாக்க மையத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியில் நடத்தப்பட்டு வருகிறது .

இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் .




எந்த மாதிரியான மரச் செடிகளை பயிரிடுவது எவ்வாறு பயிரிடுவது என அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இதேபோல் புவி வெப்பமடைதல் பற்றிய அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு எளிதான முறையில் தெரியப்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்

Post a Comment

0 Comments