திருச்சிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமான மூலம் அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை புரிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவபதி, கோகுல இந்திரா, திருச்சி மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, குமார், சீனிவாசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன்
மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி,
மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, கவுன்சிலர் அம்பிகாபதி, இலக்கிய அணி செயலாளர் பாலாஜி ,
அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், ஜெயராமன் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
0 Comments