தென் தமிழகத்தில் முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன 2 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்து மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர் காவேரி மருத்துவமனை
திருச்சி காவேரி மருத்துமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.செங்குட்டுவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதுபோல், பிறந்து 11 நாட்களே ஆன மற்றொரு குழந்தை, தொடர்ச்சியான சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டது. மருந்துகள் கொடுத்தும் கூட இதயத்தில் இருந்த ஒரு அசாதாரண ரத்த நாளத்தால் செயற்கை சுவாசத்தின் துணை அதற்கு தேவைப்பட்டது. அதாவது பிறப்பிற்கு பிறகு மூட வேண்டிய இந்த ரத்த நாளம் மூடவில்லை. இதைத்தொடர்ந்து, பிக்கோலோ எனப்படும் 4x2 மி.மீ. அளவுள்ள ஒரு சிறிய சாதனம் மூலம் அந்த திறப்பு அடைக்கப்பட்டது. இதன்மூலம் குழந்தையின் சுவாசம் 48 மணி நேரத்திற்குள் சீராகி, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
இத்தகைய சிகிச்சை தென் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சிகிச்சைக்கு சென்னை, கோவைக்கு செல்ல தேவையில்லை. சிறப்பாக சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் வினோத்குமார், மணிராம்கிருஷ்ணா, கே.செந்தில்குமார் மற்றும் குழுவினரை இந்த தருணத்தில் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது டாக்டர்கள் மற்றும் மருத்துவமனையின் முதுநிலை பொது மேலாளர் மாதவன் உடனிருந்தார்.
0 Comments