NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** விலாசம் தெரியாத உடல்நிலை பாதித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

விலாசம் தெரியாத உடல்நிலை பாதித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

 திருச்சி துவாக்குடி தேர்முட்டி அருகில் உடல் நலம் பாதித்து நடக்க முடியாமல் தடுமாறி கொண்டு இருந்த எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் வெங்கட்ராமன் இருந்தார். அந்நபர் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

சிறுநீர் மற்றும் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சையில் இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இறந்த நபர் விலாசம் ஏதும் தெரியவில்லை. இறந்தவர் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் யாரும் உடலை உரிமை கோரவில்லை. பெயர் தெரிந்த விலாசம் தெரியாத முதியவர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக துவாக்குடி காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்ணன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில், திருச்சி துவாக்குடி காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிக்கண்ணன் காவலர் துரை செபாஸ்டின் உடன் இணைந்து யோகா ஆசிரியர் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி இறந்து உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்தார்.

Post a Comment

0 Comments