NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு "மக்கள் சேவகர்" விருது

ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு "மக்கள் சேவகர்" விருது

 முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

 

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை தலைவர் சுப்பையா பாண்டியன்,அறக்கட்டளை அறங்காவலர்கள் நாகலிங்க தேவர், பரமசிவ தேவர், தமிழரசி சுப்பையா, மனோஜ் சேர்வை, டாக்டர் விஜய் கார்த்திக் சுப்பையா ஆகியோர் முன்னிலையில் ஆதரவற்ற உரிமை கோரப்படாத பிரேதங்களை உரிய முறையில் நல்லடக்கம் செய்தும், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும், 

பசிப்பிணியை போக்க அன்றாடம் அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும் நடத்தி  வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற சேவையை பாராட்டி "மக்கள் சேவகர் விருதினை" வழங்கினார்.

Post a Comment

0 Comments