// NEWS UPDATE *** வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு //////////////////////// விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது: ஓபிஎஸ் கருத்து *** மாநில மாநாட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் ; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் கோரிக்கை

மாநில மாநாட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் ; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் கோரிக்கை

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில்,  திமுக அரசு வாக்குறுதியாக கொடுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்களை முழு நேர அரசியல் ஊழியர்கள் ஆக்கி 26,000 வழங்க வேண்டும், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் ரூபாய் 9000 அகவிலை படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூபாய் 10 லட்சம் முன் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட குழுவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் ராணி வாழ்த்துரை வழங்கினார்,  சிஐடியு மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன்,விளக்க உரை ஆற்றினார்,  மாவட்ட செயலாளர் சித்ரா நன்றியுரை கூறினார்,  மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments