// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ரயில்வே பயிற்சி முகாம் - அகில இந்திய அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்பு!

திருச்சியில் தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ரயில்வே பயிற்சி முகாம் - அகில இந்திய அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்பு!

தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ரயில்வே அமைப்பு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம், திருச்சி சாரதா அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு அமைப்பின் வேலைமுறைகள், மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. 

இதில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில இந்திய அமைப்பு செயலாளர் சுரேந்திரன், துணை செயலாளர் அசோக் குமார் சுக்லா, தமிழ்நாடு மாநில செயலாளர் சங்கர்,  தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் தங்கராஜ், BRMS தேசிய அமைப்பு செயலாளர் சரவணராஜ், BRMS மத்திய செயற்குழு உறுப்பினர் மங்கேஷ் தேஷ்பாண்டே, BMS தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் துரைராஜ், BMS தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் ராஜீவன், DRKS மண்டல தலைவர் ராஜேஷ், DRKS பொது செயலாளர் ராஜேஷ் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி குறித்து விளக்கி பேசினர். 


நிகழ்விற்கு DRKS திருச்சி கோட்ட தலைவர் முத்துக்குமரன், DRKS திருச்சி கோட்ட தலைவர் சகாய விஜய் ஆனந்த், DRKS திருச்சி கோட்ட அமைப்பு செயலாளர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்வினை DRKS Gov பணிமனை கோட்ட தலைவர் சந்திரமோகன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இந்நிகழ்வில் தெற்கு ரயில்வே DRKS பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து அகில இந்திய அமைப்பு செயலாளர் சுரேந்திரன் பேசுகையில்,...பாரதிய மஸ்தூர் சங்கம் நாட்டின் மிகப்பெரிய அமைப்பு. டிசம்பர் 15 முதல் 20 ஆம் தேதி வரை நாடு முழுவதும் கோரிக்கை வாரமாக கொண்டாட உள்ளோம். 


Epf, பென்சன் சம்பந்தப்பட்ட சீலிங் தொகை 15 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை உயர்த்த வேண்டும். Esi சீலிங் தொகை 21 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரை உயர்த்த வேண்டும். ரயில்வே துறை, பாதுகாப்பு துறை, தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் தொகை 7 ஆயிரமாக உள்ளது. இதனை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் 8-வது சம்பள ஆணையத்தில் சலுகைகள் நீட்டிக்கப்படுதல், அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நீதி நியாயமான ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பை பெற BMS தனது முயற்சிகளை தொடரும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments