குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மலைகளின் இளவரசி என்ற அழைக்கக்கூடிய கொடைக்கானலில் 1906 - ஆம் ஆண்டு துவங்கப்பட்டு நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் R.C. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணப் பொருட்களை மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களின் வழிகாட்டுதல்படி மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் வழங்கினார்.
இதனை இன்முகத்தோடு பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்கள் தங்கள் நன்றிகளை ஆனந்தக் கண்ணீரோடும், அளவில்லா பொன் சிரிப்போடும் வெளிப்படுத்தினர்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.வேளாங்கண்ணி அவர்கள் பள்ளியின் வரலாற்றையும், சிறப்புமிகு பணிகளையும், சிரமமுள்ள துயரங்களையும் எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்வில் சக ஆசிரியர் உட்பட திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ், மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.









0 Comments