// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்!

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்!

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை‌ பாராட்டிய அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்!

உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் ஆளுநர் விருதினை வழங்கினார். 

ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமாரை திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், தலைவர் லால்குடி விஜயகுமார்,இணைச் செயலாளர் இளம்வழுதி, பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Post a Comment

0 Comments