// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** புழங்கு பொருட்கள் காட்சியகம் நடத்திவரும் குடும்பத்தினருக்கு யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் விருது

புழங்கு பொருட்கள் காட்சியகம் நடத்திவரும் குடும்பத்தினருக்கு யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் விருது

யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக  புழங்கு பொருட்கள் காட்சியகம் நடத்தி, சமூகத்திற்கு  ஆற்றியுள்ள  சேவையை அங்கீகரிக்கும் விதமாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் மனைவி மு.சித்ரா, மகள் வி.கீர்த்தனா உள்ளிட்டோர்க்கு தமிழ் கலாச்சாரம் , பண்பாட்டை வளர்ப்பதிலும், வருங்காலத் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்  வகையில்  சமூகத்திற்கு  ஆற்றியுள்ள பங்களிப்பைப் பாராட்டி, யாழி புக் ஆஃப் வேல்ர்டு ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  தலைமை நிர்வாக அலுவலர் ர.ரீனா 

பாரம்பரியப் பாதுகாவலர் விருதினை வழங்கி பேசுகையில், தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியம், மரபுகள் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான முயற்சிகளை யாழி புக் ஆஃப் வேல்ர்டு ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் அங்கீகரிக்கிறது என்றார்.

இது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் பேசுகையில்...தமிழர் பண்பாடு உலகின் மிகப் பழமையான மற்றும் செழுமையான பண்பாடுகளில் ஒன்றாகும். தமிழர்களின் வாழ்க்கை முறை, கலை, தொழில், நம்பிக்கை, வழிபாடு, உணவுப் பழக்கம், உபயோகப் பொருட்கள் ஆகிய அனைத்தும் அவர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பண்பாட்டு மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய இடமாக புழங்கு பொருட்கள் காட்சியகம் விளங்குகிறது.

புழங்கு பொருட்கள் என்பது மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பொருட்கள் ஆகும். மண் பானைகள், செம்புப் பாத்திரங்கள், விளக்குகள், நாணயங்கள், வேளாண் கருவிகள், நெசவுத் தொழில் கருவிகள், இசைக்கருவிகள், மரப்பொருட்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும்.

புழங்கு பொருட்கள் காட்சியகம் தமிழர் வாழ்வியல் மரபுகளை நேரடியாக அறிய உதவுகிறது. மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர், என்னென்ன கருவிகளைப் பயன்படுத்தினர், அவர்களின் தொழில்நுட்ப அறிவு எப்படி இருந்தது என்பதை இக்காட்சியகம் விளக்குகின்றன.

இக் காட்சியகத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பொருளும் தமிழரின் அறிவு, கலைநயம் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்வை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, மண் பானைகள் தமிழரின் சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகின்றன. வேளாண் கருவிகள் தமிழர் விவசாயத்தின் பெருமையை உணர்த்துகின்றன. இசைக்கருவிகள் அவர்களின் கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றன.

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பயன்

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் ஆகியோருக்கு புழங்கு பொருட்கள் காட்சியகம் ஒரு அறிவுக் களஞ்சியமாக உள்ளது. புத்தகங்களில் படிக்கும் வரலாற்றை நேரில் காணும் வாய்ப்பை இது வழங்குகிறது.

பாரம்பரிய பாதுகாப்பு அழிந்து வரும் பாரம்பரியப் பொருட்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியை காட்சியகங்கள் செய்கின்றன. இது தமிழர் அடையாளத்தை நிலைநிறுத்த உதவுகிறது.

“பழமையைப் பாதுகாப்பதே பண்பாட்டைப் பாதுகாப்பதாகும்.” தமிழர் பண்பாட்டை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம், நம் மரபையும் பண்பாட்டையும் அறியச் செய்யும் உயிருள்ள வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். இத்தகைய காட்சியகங்களை அனைவரும் பார்வையிட்டு, தமிழரின் பெருமையை உணர வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments