திருச்சிராப்பள்ளி அகிலம் வெல்வோம் அறக்கட்டளை முதலாம் ஆண்டு விழா, அன்பு சேவகர் விருது வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அகிலம் வெல்வோம் அறக்கட்டளை நிறுவனர் சுமித்ராதேவி மாதவன் துவக்க உரையாற்றினார். அறக்கட்டளை தலைவர் முதன்மை கப்பல் பொறியாளர் மாதவன் தலைமை வகித்தார்.சிவ.தளபதி தமிழழகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம், அமைச்சர் பெ.உதயகுமார்,திருக்குறள் பயிற்றகம் நிறுவனர் தமிழ்ச் செம்மல் திருக்குறள் புலவர் நாவை சிவம், திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத் தலைவர்
தமிழ்ச் செம்மல் வீ.கோவிந்தசாமி, புரட்சிப் பாவேந்தர் பேரவை
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் சு.செயலாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
மகளிரியல் துறை,
கலைப்புலத் தலைவர், முனைவர். ந.முருகேஸ்வரி,
கௌரவ விருந்தினர்
திருச்சிராப்பள்ளி
சிறப்பு மாவட்ட நீதிபதி
சி. கார்த்திகா உள்ளிட்டோர்
தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற, உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற மனிதநேய பணியினைப் பாராட்டி
அன்பு சேவகர் விருதினை வழங்கினர்.
சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் 2023 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருதும் பெற்றவர் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும் சமூக மேம்பாட்டிற்காக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பாரம்பரியத்தைக் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், 26 முறை குருதி கொடை, மூன்று ஜோடி கண் தானத்தை பெற்றுக் கொடுத்த பணி, வாழ் நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்கு பதிவு செய்தமையையும், உடல்நலம், கவிதை, கட்டுரை நூல்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் நற்றமிழ் நாவரசி முனைவர். நா. சாத்தமைப் பிரியா, ஈகை சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் அரிமா முஹமது ஷபி, கன்மலை அறக்கட்டளை ஜா. வில்பர்ட் எடிசன், அரிமா சங்க வட்டாரத் தலைவர் பிரசன்னா வெங்கடேசன், அருவி ஃபவுண்டேஷன் நிறுவனர் சையது தாஹா அஹமது உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மா. தீபரோஷ்னி, மா. ஹன்சிகா நன்றியுரையாற்றினார்.

0 Comments