// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு காய்கறி மொத்த வியாபராத்திற்கு பழைய பால்பண்ணை அரசு நிலத்தை ஒதுக்க வேண்டும் முதலமைச்சருக்கு கமலக்கண்ணன் கோரிக்கை

பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு காய்கறி மொத்த வியாபராத்திற்கு பழைய பால்பண்ணை அரசு நிலத்தை ஒதுக்க வேண்டும் முதலமைச்சருக்கு கமலக்கண்ணன் கோரிக்கை

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்‌கே கமலக்கண்ணன் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்...

அதில் அவர் கூறியிருப்பதாவது நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காந்தி மார்க்கெட் 6.5 ஏக்கர் பரப்பளவில் நிலையான மற்றும் செட்டு அமைத்து தர கடைகள் என 3000 கடைகள் உள்ளன. இதனை சுற்றி பழமண்டி, வெங்காயம் மண்டி, வாழைக்காய் மண்டி மளிகை மண்டிகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் கள்ளிகுடி பகுதியில் சுமார் ரூ.76 கோடி செலவில் உருவாக்கப்பட்ட வணிக வளாகம் போதிய உள் கட்டமைப்பு இல்லாமலும் நகருக்கு வெளியே 22 கிலோமீட்டர் தொலைவில் அமைத்ததாலும் வணிக ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது. 465 கடைகள் மட்டுமே உள்ள நிலையில் திறப்பு விழா நடத்தியும் இன்னுமும் அது செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இது ஒருபுறம் இருக்க கடந்த திமுக ஆட்சி காலத்தில் அதே பகுதியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரே 21 ஏக்கரில் ரூ‌. 256 கோடி செலவில் வியாபாரிகளிடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் புதிய மார்க்கெட் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்தத் திட்டத்திற்காக 3000 மரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் கட்டுமான பணிகளை முடித்துவிட்டு பின்னாளில் எங்களை இடமாற்றம் செய்யும்போது வழக்கு சம்பந்தமான சிக்கல் வந்தால் காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படும். ஆகவே காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் மார்க்கெட் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு திருச்சி மாநகரின் மையப்பகுதிக்கு அருகில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய வகையில் இருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டு இல்லாமல் இருக்கும் பழைய பால்பண்ணை அரசு நிலத்தை காய்கறி மொத்த வியாபாரத்திற்கு ஒதுக்கி தர வேண்டும் பின்னர் பால் பண்ண இடத்தை வணிக வளாகமாக மாற்ற ஆவணம் செய்ய வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார்






Post a Comment

0 Comments