// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** மயங்கி கிடந்த பெயர் விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்! காவலர் முன்னிலையில் நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

மயங்கி கிடந்த பெயர் விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்! காவலர் முன்னிலையில் நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நடைமேடையில் சுமார் 65 வயது மதிக்க தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தவரை உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்  மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள்.  அரசு மருத்துவமனைக்கு சென்று எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய காவலர்கள் மேற்படி நபரை பார்த்து விசாரித்தபோது அவர் மயக்க நிலையில் பேசமுடியாமல் இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் ஏதும் பெறமுடியவில்லை.  தொடர்சிகிச்சையில் இருந்து வந்தவரை பற்றி அவரது புகைப்படத்தை வைத்து விசாரணை செய்ததில் அவரது பெயர் முகவரியை அறியமுடியவில்லை.



இந்நிலையில் தொடர்சிகிச்சை பெற்று வந்த மேற்படி பெயர் விலாசம் தெரியாத  ஆண் நபர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது இறப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள  பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நடைமேடை சென்று அக்கம் பக்கம் விசாரணை செய்ததில் மேற்படி நபர்  படுத்திருந்ததாகவும் அவரது பெயர் முகவரி ஏதும் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். இறந்த நபர் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரவில்லை. உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்காக எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய தலைமை காவலர் ஜெகன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார்.தகவலின் அடிப்படையில் திருச்சி அண்ணா நகர் குழுமிக்கரை மயானத்தில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய தலைமை காவலர் ஜெகன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடலுக்கு

உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

Post a Comment

0 Comments