// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன்  தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் 



தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பாலமுருகனுக்கு தென்னைமரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தென்னை மரம்  சின்னத்துடன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து தீவிர பிரச்சாரத்தில் பாலமுருகன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவரது வார்டுக்குட்பட்ட பகுதி  பாலகிருஷ்ணன் நகர், ராமமூர்த்தி நகர், பிரீமியம் டவர்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தென்னைமரம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போதுகுடமுருட்டி கண்ணன், முன்னா, கந்தன் உள்பட 12 வது வார்டு மஞ்சள் படை நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments