தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் கலைச்செல்வி ஜெகநாதன் போட்டியிடுகிறார்.
இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 53 வது வார்டுக்குட்பட்ட ஆனைகட்டி மைதானம், கீழத்தெரு, கணபதிபுரம், ராஜா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் தணசேகரன், பீமநகர் சதீஸ்குமார், கதிர்வேல், இக்பால், பிரசாந்த், ஜெய பிரகாஷ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
0 Comments