// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 58 வது வார்டு வேட்பாளர் கவிதா செல்வம் கிராப்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

58 வது வார்டு வேட்பாளர் கவிதா செல்வம் கிராப்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 58 வது வார்டில் திமுக வேட்பாளர்  கவிதா செல்வம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 


கடந்த ஆண்டுகளில் இவர் மூன்று முறை கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பொன்மலை கோட்ட அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து தனது 58 வது வார்டுக்குட்பட்ட பகுதியில்



கிராப்பட்டி காலனி மெயின் ரோடு, அன்பு நகர், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், சிம்கோ காலனி, கிரீன் சாலை, கிருஷ்ணமூர்த்தி நகர், ரங்கா நகர், பாரதி மின் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் இவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது.


Post a Comment

0 Comments