// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** MBBS ,BDS மருத்துவ படிப்புக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியில் தொடங்கியது

MBBS ,BDS மருத்துவ படிப்புக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியில் தொடங்கியது

MBBS ,BDS  மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் சரி பார்க்கும் பணி துவங்கியது


அரசுக் கல்லூரிகளில் 3995 எம்பிபிஎஸ் இடங்கள், 157 பிடிஎஸ் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீடான 1390 MBBS  மற்றும் 1166 BDS  இடங்களுக்கு மாணவர் கலந்தாய்வு நடந்து, இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இன்று தொடங்கி வருகிற வியாழக்கிழமை வரை நடைபெறும் என மருத்துவக் கல்வித் துறை இயக்ககம் அறிவித்திருந்தது.



அதன்படி திருச்சி கி.ஆ. பெ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று காலை தொடங்கியது. மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா சான்றிதழ் சரிபார்ப்பு பணியை தொடங்கிவைத்தார், அவரது பள்ளி கல்லூரி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்ககத்தால் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தினசரி 100 பேர் வீதம் அழைப்பாணை விடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது..

Post a Comment

0 Comments