NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** நில வணிகர் நல சங்கம் மாநில நிர்வாக குழு கூட்டம்

நில வணிகர் நல சங்கம் மாநில நிர்வாக குழு கூட்டம்

திருச்சியில் நில வணிகர்கள் நலச்சங்க மாநில நிர்வாக குழுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முன்னாள் எம்எல்.ஏ. அப்துல் நாசர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநில பொருளாளர் டாக்டர் எஸ்.ஏ.ரஹீம் வரவேற்று பேசினார்.




நிர்வாகக் குழு உறுப்பினர் முகமது யாசின், மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், ஏ.பி.சி.பாபு, மாநிலச் செயலாளர்கள் சிவகங்கை முத்துக்குமார் நியாஸ் அகமது மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கருமாரி கருணாகரன், குண்டூர் கணேசன், மாநில துணைத்தலைவர் ரியாஸ் பாஷா, அமைப்புச் செயலாளர் அரீப், வக்கீல் அணி திலீப் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-




மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் (ஆர்.இ.ஆர்.ஏ.) ஏற்கனவே டி.சி.டி.பி. அங்கீகாரம் பெற்றிருந்தாலும், மத்திய அரசின் புதிய சட்டத்தின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும் என சொல்கிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தான் அந்த அலுவலகம் உள்ளது. இதனால் ஆர்.இ.ஆர்.ஏ. அங்கீகாரம் பெற காலதாமதம் மற்றும் பண விரையம் ஆகின்றது. எனவே தமிழக அரசு மாவட்டந்தோறும் கிளை அலுவலகங்கள் திறக்கவேண்டும்.



பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாற்றம் நடைமுறையில் இருந்தாலும், பட்டா கிடைக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் ஆகியோரல் கால தாமதம் ஆகின்றது. இது விஷயத்தில் அரசு கவனம் கொள்ளவேண்டும். நிலா வணிகர்கள் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். ஆகவே நில தரகர் நல வாரியம் அமைக்க அரசு முன்வரவேண்டும்.

நீண்ட காலமாக நில தரகர் கமிஷன் தொகை 2 சதவீதமாக உள்ளது. அதை கோடிக்கணக்கான வியாபாரதிற்கு 2 சதவீதம் கமிஷணும், லட்ச கணக்கில் நடைபெறும் வியாபாரத்தில் 3 சதவீதம் என்று நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments