SDPI கட்சியின் 14ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு ஜூன் 21, 2022 திருச்சி தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் மணப்பாறை தொகுதி புத்தாநத்தம் கிளை சார்பாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு கிளை தலைவர் இமாம்.காஜா அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் SDPI கட்சியின் மணப்பாறை தொகுதி பொறுப்பாளரும்,திருச்சி தெற்கு
மாவட்ட செயலாளருமான ஏர்போர்ட் மஜீத் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் பிச்சைகனி ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உணவுகளை மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
மேலும் கிளையின் செயலாளர் முபாரக்,எஸ்டிபிஐ கட்சியின் புத்தாநத்தம் 6வது வார்டு கவுன்சிலர் முகமது கோயா மற்றும் கிளையின் நிர்வாகிகள் முன்னிலை வகித்து உணவுகளை வழங்கினர்.
பள்ளியின் ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்தனர்
0 Comments