BREAKING NEWS *** திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணையை தற்காலிகமாக நிறுத்திய ஆந்திர சிறப்பு விசாரணைக் குழு *** குளித்தலை அருகே சிவாயம் பிடாரி அம்மன் கோவில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

குளித்தலை அருகே சிவாயம் பிடாரி அம்மன் கோவில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம்  பிடாரி அம்மன் கோவில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம்,சத்தியமங்கலம் கிராமம், சிவாயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர்,ஏகாம்பரி ஈஸ்வரி பிடாரி அம்மன் மகா மாரியம்மன், கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.


குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.

புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து பூஜை, லட்ச்சார்ச்சனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். 

இன்று காலை 4ம் கால யாக வேள்வி முடிவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.


பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்க்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து சுவாமி மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அர்ச்சனை,  ஆராதனைகளும் நடைபெற்றன 


 இந்த கும்பாபிஷேக விழாவில்  சிவாயம்,ஐயர் மலை ,இரும்புதி பட்டி,வளையப்பட்டி , ஈச்சம்பட்டி, மற்றும் குளித்தலை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 3000க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்கள்ராக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், பட்ட தளச்சி அம்மன் அறக்கட்டளை திருப்பூர் சரவணன், அறத் கட்டளை நிர்வாகிகள், திமுக ஈச்சம் பட்டி சரவணன் ,தமிழரசன், வை.புதூர் பெரியசாமி, கணவை செல்வம்,அதிமுகஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், இளங்குமரன்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டார்கள

நிருபர் கரூர் குமரவேல் 

Post a Comment

0 Comments